சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் டீசல் வர தாமதமானதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பாரத் பெட்ரோல் பங்குகளில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் இந்துஸ்தான் மற்றும் பாரத் பெட்ரோல் பங்குகளில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாகவே டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், முழு தொகை செலுத்தியும் டீசல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, டீசல் தட்டுப்பாடு குறித்து விடியா அரசுக்கு தகவல் தெரிந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும், இதனால் கண்டெய்னர், டிரெய்லர் லாரி தொழிலில் ஈடுபட்டுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் சென்னை துறைமுக ட்ரெய்லர் லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Discussion about this post