நியூஸிலந்துடனான ஆட்டத்தில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படும் தோனியின் ரன் அவுட், போட்டி நடுவர்களின் கவனக்குறைவால் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டின் விதிகளின் படி, ஆட்டத்தின் கடைசி 10 ஓவர்களில் 5 FIELDER-கள் மட்டுமே உட்புர வட்டத்துக்கு வெளியே நிற்க முடியும். ஆனால் தோனி ரன் அவுட் ஆன பந்தை வீசும் முன்பாக, பந்து வீச்சாளர் ஆறாவதாக FINE LEG திசையில் ஒருவரை வட்டத்துக்கு வெளியில் நிற்க வைக்கிறார். அதை போட்டி நடுவர்கள் கவனிக்காமல் மெத்தனமாக விடவே, அதே திசையில் பந்தை அடித்து தோனி ரன் அவுட் ஆகியுள்ளார். 10 பந்துகளில் 25 ரன்கள் தேவை என்கிற நிலையில், முந்தைய பந்தில் சிக்ஸர் விளாசி, அடுத்த பந்தில் நடுவரின் கவனக் குறைவால் தோனி ஆட்டமிழக்கும் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
Discussion about this post