அடடே ! சூப்பர் கூட்டணி..பாலிவுட்டில் மீண்டும் குதித்த தனுஷ்

நடிகர் தனுஷ் சாரா அலிகான், அக்‌ஷய் குமார் இணைந்து ஆனந்த் ராய் இயக்கத்தில் நடிக்கவுள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகிவுள்ளது.

தமிழ் சினிமாவில் எத்தனையோ முன்னணி நடிகர்கள் வலம் வந்தாலும் ஹாலிவுட், பாலிவுட்டில் நடித்து பாராட்டை பெற்ற பெருமை தனுஷிற்கே உள்ளது.சமீபத்தில்  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ’அசுரன்’ திரைப்படம் உலகளவில் பெரும் வெற்றியை பெற்று தந்தது.அதனை தொடர்ந்து பொங்கலை முன்னிட்டு ’பட்டாஸ்’ திரைப்படமும் வெளியானது.இப்படி அடுத்தடுத்து பிசியாக தமிழில் படம் நடித்து கொண்டிருக்கும் தனுஷ் தற்போது பாலிவுட்டில் நடிக்க தயாராகிவுள்ளார்.

பாலிவுட்டில் பிரபல இயக்குநரான ஆனந்த் ராய் இயக்கத்தில்  தனுஷ், சாரா அலிகான், அக்‌ஷய் குமார் கூட்டணியில் இந்த படம் உருவாகவுள்ளது.மார்ச் முதல் வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 2013 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த ’ராஞ்சனா’ திரைப்படத்தை இயக்கியவரும் இந்த படத்தின் இயக்குனரே  என்பது குறிப்பிடதக்கது.

 

Exit mobile version