தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதனை தடுப்பதற்கு சைபர் கிரைம் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள காவல்துறையினர் முன் வரலாம் என்று டிஜிபி திரிபாதி அழைப்பு விடுத்துள்ளார்.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகத்தில் அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள் காவல்துறையினருக்கு மிக சவாலானதாக உள்ளது. பல புதிய தொழில்நுட்ப முறையில் குற்றச்சம்பவங்கள் நிகழ்வதால், அதை தடுக்க காவல் துறையினரும் சில தொழில்நுட்ப நுணுக்கங்களை தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் சமூகமும் உள்ளது. சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க சைபர் பிரிவு காவல் துறையினர் ஈடுபட்டு வந்தாலும், அதில் ஆர்வமுடைய காவலர்கள் சைபர் கிரைம் தடுப்பு பிரிவில் பணியாற்ற முன்வரலாம் என காவல்துறை இயக்குனர் திரிபாதி அறிவித்துள்ளார்.
சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றியபோது பணியில் ஒரு திருப்தி ஏற்படுவதாகவும், அதில் ஏற்படுகின்ற நுணுக்கமான அனுபவம், குற்றங்களை முன்கூட்டியே தடுக்க உதவும் என்றும் அந்த அனுபவம் நமக்கு சிறப்பாக இருக்கும் என்றும் காவல்துறை கூடுதல் இயக்குனர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பதில் தமிழகம் முன்னோடியாக திகழ்ந்து வந்தாலும், முன்கூட்டியே தடுக்கக் கூடிய அளவில் நாம் இன்னும் துரிதமாக செயல்பட வேண்டும் என்று, காவல்துறை கூடுதல் இயக்குனர் சீமா அகர்வால் தெரிவித்துள்ளார்.
வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் மிகவும் பெருகி வரக்கூடிய குற்றங்களாக, சைபர் கிரைம் உள்ளதால் அதில் ஆர்வமிக்க காவல்துறையினர் முன் வரலாமென்று காவல்துறை கூடுதல் இயக்குனர் ஜெயந்த் முரளி தெரிவித்துள்ளார்.
ஆர்வமுள்ள காவலர்களை சைபர் கிரைம் தடுப்பு பிரிவில் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ள காவல்துறை இயக்குனர் திரிபாதியின் நோக்கம், வரும் காலங்களில் சைபர் குற்றங்களை தடுக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கலாம்.
Discussion about this post