திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வரலாற்றில் முதல்முறையாக சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜை, பக்தர்கள் இன்றி நடைபெற்றது. நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விளங்குகிறது. உலகப் புகழ் பெற்ற அண்ணாமலையார் கோயிலில், பௌர்ணமி நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். சித்ரா பௌர்ணமி தினத்தன்று, பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக, வரலாற்றில் முதல்முறையாக அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பௌர்ணமி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், நேற்று பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இருப்பினும் சித்ரா பெளர்ணமி சிறப்பு அபிஷேகத்தை பக்தர்கள் ஆன்லைனில் பார்க்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. ஊரடங்கு காரணமாக, சித்ரா பெளர்ணமி நாளில் திருவண்ணாமலை மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் கிரிவல பாதையில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
Discussion about this post