20 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த பெண். தற்போதைய வருமானம் 7.5 கோடி. யார்? இந்த பெண்.
தனது விட முயற்சி காரணமாக வாழ்நாளில் பல போராட்டங்களை கடந்து சாதித்துள்ளார் சினுகலா. சினுகலா தனது 15 வயதில் ஒரு கோபாத்தில் வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது, சினுகலாவிற்கு எதிரே ஒரு இருண்ட நிச்சயமற்ற எதிர்காலம் நின்று கொண்டிருந்தது. ஆனால் சினு அதைக் கண்டு அச்சமடையவில்லை தனது விடாமுயற்சியை தன் துணையாக கொண்டார்.
இவர் வீடுவீடாகச் சென்று கத்திகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்யத் தொடங்கினார். அன்று தொடங்கிய அவரின் வியாபாரப் போராட்டம், இன்று வரை தொடர்ந்து அவரை ஓர் வெற்றியாளராக மாற்றியுள்ளது. ஆம், அன்று நாளொன்றுக்கு ரூ. 20 சம்பாதிக்கப் போராடிய அவரின் இன்றைய ஆண்டு வருமானம் ரூ. 7.5 கோடி ஆகும்.
சினு, சிறு வயதில் எண்ணற்ற கஷ்டங்களை பல்வேறு அவமானங்கள் அனைத்தையும் கடந்து வெற்றியை நோக்கிமட்டுமே ஒடிகொண்டிருந்தார். பின்னர் 8 ஆண்டுகளில் பல்வேறு பணிகள், விதவிதமான அனுபவங்கள் என வாழ்க்கை அவருக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது.
2004ம் ஆண்டு பெங்களூரில் சினுவிற்கு திருமணம் நடைபெற்றது. அப்போது நண்பர்கள் அளித்த உத்வேகத்தினால் Gladrags Mrs India Pageant, 2008ல் பங்கேற்றார். இதில் இறுதி நிலை வரை சென்றார். பிறகு சினு வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு உயர்ந்து, மாடலிங் துறையில் நுழைந்தார். பின்னர் தந்து வாழ்க்கையின் புதிய முயற்சியாக Fonte Corporate Solutions என்ற நிறுவனத்தைத் தொடங்கி ஓர் தொழில் முனைவோராக எனது பயணத்தைத் தொடங்கினார் சினு. இருப்பினும் முதலீடு செய்ய போதிய பணம் இல்லாததால் மாடலிங் துறையில் இணைந்து கார்ப்பரேட் வணிகமயமாக்கல் மூலம் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து ஏர்டெல், சோனி, ஈஎஸ்பிஎன், ஆஜ் தக் மற்றும் இன்னும் பல பிராண்டுகளுடன் இணைந்து பணியாற்றினார்.
தனது மாடலிங் துறை, பேஷன் துறையில் தனது ஆர்வம், கார்ப்பரேட் வர்த்தகத்தில் தனது அனுபவம் என அனைத்தையும் இணைத்து 2014ல் அவர் Rubans Accessories -யை நிறுவினார். பெங்களூரில் உள்ள பீனிக்ஸ் மாலில் 70 சதுர அடி பரப்பளவில் ரூ.3 லட்சம் முதலீட்டில் ரூபன்’ஸ் ஆபரணங்கள் என்ற கடை தொடங்கினார். 2019ம் ஆண்டிலேயே இந்நிறுவனம் ரூ. 7.5 கோடி வருமானத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. சினுவின் தற்போதைய வெற்றி தொழில் முனைய துடிக்கும் அனைத்து பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாகவே இருக்கும்.
Discussion about this post