இந்தியாவுக்கு அண்மையில் படையெடுத்த கோடிக்கணக்கான பாலைவன வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பயிர்களை நாசம் செய்தன. இதையடுத்து தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டு, வெட்டுக்கிளிகளின் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், இம்மாத இறுதியிலோ அல்லது ஜூலை மாத தொடக்கத்திலோ மீண்டும் வெட்டுக்கிளிகள் அதிகளவில் வரக்கூடும் என, வெட்டுக்கிளிகள் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து புறப்படும் வெட்டுக்கிளிகள், அரபிக்கடலில் உருவாகும் மழைக்காற்றின் மூலம் இந்தியாவுக்குள் வரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கோடை மற்றும் மழைக்காலங்கள் வெட்டுக்கிளிகளுக்கு மிகவும் உகந்தவை என வெட்டுக்கிளிகள் எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் தடுப்பு மருந்துகள் மற்றும் டிரோன்கள் வாங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post