திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்: துணை முதல்வர்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, வேலூர் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என துணை முதலமைச்சர் கூறியுள்ளார்.

வேலூர் மக்களவை தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தீவிர பிரசாரம் செய்து வருகிறார். ஆம்பூர் பைபாஸ் சாலையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர், நடைபெற்று வரும் அதிமுக அரசு செய்து வரும் பல்வேறு நலத்திட்ட பணிகளை எடுத்துரைத்து பிரசாரம் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகிறார் என்று கடுமையாக சாடினார். மேலும், ஸ்டாலினுக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார். மின்சார தட்டுப்பாடை கட்டுப்படுத்த முடியாத, செயலிழந்த அரசாக திமுக செயல்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

Exit mobile version