மக்களின் நலனை உணர்ந்து நலத்திட்டங்களை அறிவிக்கும் ஓரே கட்சி அதிமுக தான் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம் தெரிவித்தார்.
விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து, தென்னமாதேவி பகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பேசிய துணை முதலமைச்சர், நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்றதாக சாடினார்.
Discussion about this post