வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற திட்டப்பணிகளை பார்வையிடுவதற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமெரிக்கா செல்கிறார்.
வருகிற 7ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு அவர் அமெரிக்கா செல்கிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு செல்லும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு மேற்கொள்ளப்படும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற திட்டப்பணிகளை பார்வையிடுகிறார். 17ஆம் தேதி வரை அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட பிறகு துணை முதலமைச்சர் சென்னை திரும்புகிறார்.
Discussion about this post