சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் அண்ணா நினைவிடங்களில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், தேனி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர், இஸ்லாமிய பெருமக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Discussion about this post