தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பாப்பியன் பட்டி கண்மாய் தூர்வாறும் பணியை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் மரக்கன்று நடும்பணியையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த கண்மாயை தூர்வாறுவதன் மூலம் 123 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். 4 மதகுகள் மற்றும் ஆயிரத்து 835 மீட்டர் நீளமுள்ள கரைகள் பலப்படுத்தல் பணிகளும் நடை பெற்று வருகிறது. கண்மாயில் மழை நீரைத் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Discussion about this post