அருண் ஜேட்லியின் மறைவிற்கு துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஒ.பன்னீர்செல்வம், தாய் திரு நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த அருண்ஜேட்லி உச்சநீதி மன்ற மூத்த வழக்கறிஞராகவும் சேவையினை நல்கியுள்ளார் என தெரிவித்துள்ளார். மேலும், அவரது மறைவால் மிகுந்த துயரத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதபத்தையும் தெரிவித்து கொள்வதாக பதிவிட்டுள்ளார்.
Discussion about this post