தேனி மாவட்டம், போடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உப்பார்பட்டி, சீலையம்பட்டி, கோட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் துணை முதலமைச்சர் நேரடியாக சென்று மக்களை சந்தித்தார். அப்போது, அவர்களின் குறைகளை கேட்டறிந்த அவர், கோரிக்கைகளை மனுக்களாகவும் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, பொதுமக்களிடம் பேசிய துணை முதலமைச்சர், இந்த பகுதிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக செய்து தரப்படும் என்று கூறினார். Urban village என்னும் மத்திய அரசு திட்டத்தில் தேனி மாவட்டத்தில் 7 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், உடனடியாக அதற்கான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
Discussion about this post