நடிகர் விவேக் விரைவில் குணமடைந்து வர வேண்டும்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ட்வீட்

மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளார். இந்நிலையில், நடிகர் விவேக் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட்டில் தெரிவிக்கப்படதாவது:  “மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் திரு.விவேக்  @Actor_Vivek அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.”

Exit mobile version