மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளார். இந்நிலையில், நடிகர் விவேக் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட்டில் தெரிவிக்கப்படதாவது: “மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் திரு.விவேக் @Actor_Vivek அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.”