தீபாவளிப் பண்டிகையையொட்டி வெளியூர் செல்லும் தனியார் பேருந்துகளின் கட்டணம் 20 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தீபாவளிப் பண்டிகையையொட்டி, தனியார் பேருந்துகளின் கட்டண நிர்ணயம் தொடர்பாக, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தீபாவளிக்காக ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதாவது வார இறுதி நாட்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட 20 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Discussion about this post