மேற்கு வங்கத்தில் யோகி ஹெலிகாப்டர் தரையிறங்க 2-வது முறையாக தடை

யோகி ஆதித்யாநாத்தின் ஹெலிக்காப்டர் தரையிறங்க மம்தா அரசு இரண்டாவது முறையாக தடைவிதித்ததால், ஜார்கண்ட்டில் இருந்து சாலை மார்க்கமாக மேற்குவங்கம் சென்று பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் கணிசமான அளவு இடங்களை பிடிக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. இதனையொட்டி, ஜார்கண்ட் எல்லையில் உள்ள புருளியா என்ற இடத்தில் உத்தரபிரதேச முதலமைச்சர், யோகி ஆதித்யநாத் கலந்து கொள்ளும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அக்கட்சியினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

ஆனால் யோகியின் ஹெலிக்காப்டர் தரையிறங்க 2-வது முறையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து, சாலைமார்க்கமாக மேற்கு வங்கம் சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதே நேரம் பங்குரா என்ற இடத்தில் நடைபெற இருந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்திற்கு மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்ததால், அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

Exit mobile version