ஆன்லைன் மருந்து வர்த்தகத்தை தடை செய்ய வலியுறுத்தி மருந்து வணிகர் சங்கத்தினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் ஆன்லைன் மருந்து வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். ஆன்லைனில் விற்கப்படும் போலி மருந்துகளை கண்டறிந்து தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் மருந்து வணிகர் சங்கத்தினர் 100 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலி மருந்துகளை ஊக்கவிக்க கூடாது போன்ற பதாதைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.
Discussion about this post