உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை மாமல்லபுரத்தை ஒட்டிய கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், விதிகளை மீறி கட்டப்பட்ட ஆடம்பர சொகுசு பங்களாவை இடிக்கும் பணியில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது..
கிழக்கு கடற்கரை சாலையில், சினிமா பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் விதிகளை மீறி கட்டியுள்ள சொகுசு பங்களாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக பொதுப்பணித்துறை, கடலோர ஒழங்குமுறை மண்டலம் அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், முட்டுக்காடு கடற்கரையோரத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட 5 சொகுசு பங்களாக்களுக்கு மின்சாரம், தண்ணீர் விநியோகத்தை துண்டிக்கவும், ஒரு சொகுசு பங்களாவை இடிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமையில், விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள ஆடம்பர சொகுசு பங்களாவை இடிக்கும் பணி தொடங்கியது. இதனால் அதே பகுதியில் சொகுசு பங்களாக்கள் வைத்துள்ள திரை பிரபலங்களும், தொழிலதிபர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.
Discussion about this post