மக்கள்தொகை தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் விதிமீறலில் ஈடுபட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30- ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒரு பகுதியில் 6 மாதங்களாக வசிப்பவர்கள் அல்லது அடுத்த 6 மாதங்களுக்கு அதே பகுதியில் வசிக்க இருப்பவர்கள், குடிமக்களாக கருதப்படுவார்கள் என்றும், ஒவ்வொருவரும் இதில் பதிவு செய்வது கட்டாயம் என்றும், அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து விளக்கமளித்த மத்திய அரசு, மக்கள்தொகை சட்டப்படி, ரகசியம் காப்பாற்றப்படும் என்றும் இந்த சட்டத்தின் விதிமுறைகளை மீறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 8 ஆயிரத்து 700 கோடி ரூபாய் செலவில் நடக்கும் இப்பணியில், 30 லட்சத்துக்கு மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர்.
Discussion about this post