இரட்டை இலை சின்னம் வழங்கக்கோரிய மேற்முறையீடு வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், இரு அணிகளாக பிரிந்ததால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. விசாரணைக்கு பின்னர், கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, டிடிவி தினகரன் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேற்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, கடந்த 8 ஆம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்பது குறித்து இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
Discussion about this post