தலைநகர் டெல்லியில் இன்று தீடிரென்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் இன்று பிற்பகலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கமானது டெல்லிவரை பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இன்று நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 5.8 ஆகும். இதனை ஒட்டி அதன் தாக்கம் டெல்லி வரை பரவியுள்ளது. டெல்லியின் சில பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக குலுங்கி உள்ளன. உடனே டெல்லியில் உள்ள மக்கள் பதறி அடித்து ஓடியுள்ளனர். மக்கள் ஓடும் காணொளியானது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் உத்ரகாண்டின் பிதாரோரார் இடத்தில் இருந்து 148 கி.மீ பயணத்தில் மையங்கொண்டு இருந்தது. இதன் அளவு 5.8 ரிக்டர் அளவு என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்த நிலநடுக்கமானது அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் மிகுந்த அளவு பாதித்துள்ளது. இதன் தாக்கம் டெல்லி மற்றும் என்.சி.ஆர் பகுதிகள் வரை நில அதிர்வினை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அதிர்வு 30 நொடிகள் வரை நீடித்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.