டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 21 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 33 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
Discussion about this post