நேற்றிரவு டெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமாநிலைய காவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேற்றிரவு 8.50 மணியளவில் தொலைபேசியில் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் விமான நிலையத்தில் 2-வது முனையத்திற்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்கும் என மிரட்டல் விடுத்துவிட்டு, போனை துண்டித்துள்ளார்.
இதனையடுத்து, உடனடியாக போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கிருந்த பொதுமக்கள் விரைவாக வெளியேற்றப்பட்டனர். விமான நிலையத்தின் பயணிகள் புறப்படும் 4-வது நுழைவு வாயில் மூடபட்டது. தொடர்ந்து வெடிகுண்டை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய, துணை ஆணையர் சஞ்சய் பஹாதியா, சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை என்றார். மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார். வெடிகுண்டு புரளியால், டெல்லி விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர், சகஜநிலை திரும்பியது.
Discussion about this post