டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி சென்ற விவசாயிகள் பேரணி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உற்பத்தி பொருளுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணியாக விவசாயிகள் சென்றனர்.
இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தலைநகர் டெல்லி திணறியது. நாடாளுமன்றம் அருகே சென்ற விவசாயிகள் பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனிடையே, இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி, சரத் யாதவ் உள்ளிட்டோரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தால் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Discussion about this post