புதிய மின் இணைப்பு வழங்க தாமதிக்க கூடாது என விடியா அரசின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, போலியாக பேசி மக்களை ஏமாற்றி வரும் நிலையில், அதனை பின்பற்றும் வகையில் மின்வாரிய ஊழியர்களும் மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருவது பொதுமக்களின் தொடர் குற்றச்சாட்டுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. குறிப்பாக வீடு கட்ட தற்காலிக மின் இணைப்பு பெறுவதற்கு ஒருவர் விண்ணப்பிக்கிறார் என்றால், அவருக்கு குறைந்தது 30 நாட்களுக்கு மேலாக இணைப்பு வழங்கப்படாமலும், மின் கம்பம் நடப்படாமலும் அலைக்கழிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பகுதி மின் பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது போதிய உபகரணங்கள் கையிருப்பில் இல்லாததால் இணைப்பு வழங்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர். பெயரளவில் அறிவிப்புகளை வெளியிடும் விடியா அரசு, அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை என்பது இதன்மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
Discussion about this post