அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் பட்டம் முழுவதும் ரத்து செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பில், விடைத்தாள் மாற்றம் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால் தொடர்புடைய மாணவர்களின் பட்டம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. பேராசிரியர்கள், பேராசிரியர்கள் அல்லாத பணியாளர்களும் முறைகேட்டில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள அண்ணா பல்கலைக்கழகம், மாணவர்கள், பேராசிரியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தால் அது பற்றிய தகவலை தெரியப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், கடந்த செமஸ்டரில் முறைகேடுகள் தொடர்பாக 132 மாணவர்களின் பட்டம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post