பாதுகாப்பத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்து நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
ரஷ்யாவுடன் ஏவுகணைகள் வாங்குவது தொடர்பாக 5.43 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதேபோல ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அதிபர டிரம்ப் இன்னும் முடிவெடுக்காத நிலையில், இதுகுறித்து விவாதிக்கவும், இருதரப்பு ஒத்துழைப்பு, இந்தோ-பசுபிக் பகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்த பயணத்தின் போது, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜிம் மாட்டீசை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
Discussion about this post