தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் பிப்ரவரி மாதம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி முக்கொம்பு கதவணை உடைந்த விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக, மு.க.ஸ்டாலின் மீது, திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பிப்ரவரி 13ஆம் தேதி ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதே போன்று, அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து கூறிய இளங்கோவன் மீதும், திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பிப்ரவரி 12ம்தேதி இளங்கோவன் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.