புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் கடல் மீன்களின் விலை வெகுவாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
புரட்டாசி மாதத்தை ஒட்டி பெரும்பாலான மக்கள் அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் மீன் விற்பனை மந்தமடைந்துள்ளது. திண்டுக்கல்லிலும் மீன் வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், விற்பனை சரிந்து, விலை் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன் 600 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வஞ்சரம் மீன், தற்போது 400 முதல் 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது எனவும் புரட்டாசி மாதம் முடியும் வரை இதே நிலை நீடிக்கும் என்றும் மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post