கொரோனா விதிமுறைகள் தொடர்பான கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கான தண்டனைகளை கடுமையாக்க, புதிய அவசர சட்டத்தை கொண்டுவர, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொது மக்கள் முக கவசம் அணியாமல் பொது வெளியில் வரக்கூடாது, சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும், வணிகர்கள் கடைகளில் சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த தண்டனைகளை கடுமையாக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக தமிழக சுகாதாரத்துறை செயலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று பல்வேறு தண்டனைகளை அதிகப்படுத்தி தொற்றுநோய் சட்டத்தின் கீழ் அவசர சட்டமாக பிறப்பித்து, விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
Discussion about this post