மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும், நாடாளுமன்ற தேர்தலுக்கு கடுமையாக உழைக்க வேண்டும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 9 அம்ச தீர்மானங்களை அம்மா பேரவை செயலாளர், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வாசித்தார். அதில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட வேண்டும், ஜெயலலிதாவின் சிலையை நாடு முழுவதும் திறக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24ஆம் தேதியை பசிப்பிணி தீர்க்கும் நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தை புரட்சி தலைவி அம்மா மிதிவண்டி திட்டம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் ஆர்.பி.உதயகுமார் குறிப்பிட்டார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Discussion about this post