அதானி என்டெர்பிரைசஸ் நிறுவனம்,எஃப்.பி.ஓ மூலம் பங்குகளை வெளியிடும் திட்டத்தை. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆனால், அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை காரணமாக, அதானி நிறுவனங்களின் பங்குகள் 28 சதவீதம் சரிந்தததால், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 11-வது இடத்திற்கு தள்ளப்பட்டார் கெளதம் அதானி. இந்நிலையில், எஃப்.பி.ஓ முறையில் அதானி என்டர்பிரைசஸ் பங்கு, 112 சதவீதம் அளவுக்கு முதலீட்டாளர்களால் கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டது. இந்நிலையில், FPO-வை கைவிட்டு, அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பணத்தை திருப்பி கொடுக்க, அதானி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை தக்கவைக்கும் வகையில், அதானி தரப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
Discussion about this post