அத்திவரதர் தரிசன வசதிகள் தொடர்பான வழக்குகளுக்கு வரும் 29ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. அத்தி வரதரை தரிசனம் செய்வதற்காக காஞ்சிபுரம் வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, மத்திய துணை ராணுவ பாதுகாப்பு, வரதராஜர் சன்னதி திறப்பு, உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு, அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு அன்றாட வாழ்க்கை பாதிக்காத வகையில் நடவடிக்கை ஆகிய கோரிக்கைகளுடன் 5 வழக்குகள் நீதிபதிகள் மாணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உயிரிழந்த 6 பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழக்கவில்லை என்றும், தரிசனத்திற்கு பிறகே பலியானதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவம், சுகாதாரம், தீயணைப்பு, குடிநீர், பழரசம், அன்னதானம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், வரும் 29ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என வழக்கை தள்ளி வைத்தனர்.
Discussion about this post