அதிவேகமாகச் செல்லும் எஸ் ஆர் 71 ப்ளாக் பேர்ட் (SR-71 Blackbird)விமானத்தை மீண்டும் தயாரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
1950களில் ரஷ்யாவுடனான பனிப்போரின் போது லாக்ஹீட் எஸ் ஆர் 71 என்ற விமானத்தை அமெரிக்கா தயாரித்தது. இதுவரை தயாரிக்கப்பட்ட விமானங்களிலேயே அதிக வேகமாகவும், அதிக உயரமாகவும் பறக்கும் திறன் கொண்டது இந்த விமானம். 80 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு 3 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் வேகத்தில் சாதாரணமாக பறக்கும் திறன் கொண்டவையாகும்.
அதிக வேகமாக செல்வதால், அப்போதைய காலகட்டத்தில் எந்த நாட்டு ரேடாரிலும் சிக்காமல் தாக்குதல் நடத்தி வந்தது. 1960ம் ஆண்டு அமெரிக்காவின் உளவு விமானமான யு 2 என்ற விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியது.இதனால் இந்த விமானத்தின் பயன்பாட்டை அமெரிக்கா படிப்படியாக நிறுத்தியது. தற்போது உளவு நிறுவனமான சிஐஏ மீண்டும் எஸ் ஆர் விமானத்தை தயாரித்து பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Discussion about this post