அமெரிக்காவிடம் இருந்து 72 ஆயிரத்து 400 அதி நவீன துப்பாக்கிகளை கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மத்திய பாதுகாப்புத்துறையில், தற்போது ஐ.என்.எஸ்.ஏ.எஸ் வகை துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு மாற்றாக, நவீன Assault ரக துப்பாக்கிகளை வாங்க, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்து, அமெரிக்க நிறுவனத்துடன் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதில், 66 ஆயிரத்து 400 துப்பாக்கிகள் இந்திய ராணுவத்திற்கும், 2 ஆயிரம் துப்பாக்கிகள் இந்திய கடற்படைக்கும், 4 ஆயிரம் துப்பாக்கிகள் இந்திய விமான படைக்கும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post