தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் மார்ச் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி வரை 22 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை வரும் 9ம் தேதி தொடங்கும் நிலையில், சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, சபாநாயகர் தனபால், மானியக் கோரிக்கை மீதான விவாதம் மார்ச் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெறும் என அவித்தார். 9ஆம் தேதி இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார்.
மார்ச் 11 ஆம் தேதி வனத்துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. 12 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை, 13 ஆம் தேதி எரிசக்தித்துறை, 16ம் தேதி உள்ளாட்சித்துறை, 17ம் தேதி மீன்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்தார்.
23ம் தேதி முன்பணம் மாணியக் கோரிக்கைகள், 2019-20 ஆம் நிதியாண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் குறிப்பிட்டார். 24ம் தேதி தொழில்துறை, 26ம் தேதி கைத்தறித்துறை, 27 மற்றும் 30ம் தேதி உள்துறை, 30ம் தேதி வணிக வரித்துறை, 31ம் தேதி வேளாண்துறை ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறும் என சபாநாயகர் கூறினார்.
ஏப்ரல் 1ம் தேதி தகவல் தொழில்நுட்பத்துறை, 2ம் தேதி சுகாதாரத்துறை, 3ம் தேதி சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை, 4ம் தேதி தொழிலாளர் நலத்துறை, 8ம் தேதி ஆதிதிராவிடர் நலத்துறை, 9ம் தேதி பொதுத்துறை மீதான மானியக் கோரிக்கை மற்றும் அரசினர் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல் நடைபெறும் என சட்டப்பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார்.
மார்ச் 11 – வனத்துறை
மார்ச் 12 – பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை
மார்ச் 13 – எரிசக்தித்துறை
மார்ச் 16 – உள்ளாட்சித்துறை
மார்ச் 17 – மீன்வளத்துறை
மார்ச் 23 – முன்பண மாணியக் கோரிக்கை, 2019-20 ஆம் நிதியாண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கை தாக்கல்
மார்ச் 24 – தொழில்துறை
மார்ச் 26 – கைத்தறித்துறை
மார்ச் 27, 30 – உள்துறை
மார்ச் 30 – வணிகவரித்துறை
மார்ச் 31 – வேளாண்துறை
ஏப்ரல் 1 – தகவல் தொழில் நுட்பவியல் துறை
ஏப்ரல் 2 – சுகாதாரத்துறை
ஏப்ரல் 3 – சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை
ஏப்ரல் 4 – தொழிலாளர் நலத்துறை
ஏப்ரல் 8 – ஆதிதிராவிடர் நலத்துறை
ஏப்ரல் 9 – பொதுத்துறை மீதான மானியக்கோரிக்கை, அரசினர் சட்ட முன்வடிவுகள் ஆய்வுசெய்தல் மற்றும் நிறைவேற்றுதல்
Discussion about this post