தமிழக சட்டப்பேரவையில், 2020-21ம் ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் பல்வேறு துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று சமூகநலன், சத்துணவுத்திட்டத்துறை, மாற்றுதிறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறபடுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. விவாதத்திற்கு அமைச்சர்கள் சரோஜா, வளர்மதி ஆகியோர் பதில் அளிக்க உள்ளனர். பின்னர் துறை சார்ந்த அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட உள்ளார்.
Discussion about this post