மிக இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்ததால் டெல்லியில் தொழிலதிபர் ஒருவர் மரண விளிம்பு வரை சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகரீக உடைகளில் ஆண், பெண் இருபாலர் மத்தியில் பிரபலமானது ஜீன்ஸ் பேண்ட். விதவிதமான டிசைன்கள், கலர்கள் என அதை அணிந்தாலே ஒரு ஸ்மார்ட் லுக் நம்மில் தோன்றும்.
ஆனால் மிக இறுக்கமாக ஜீன்ஸ் பேண்ட் அணிந்த டெல்லி தொழிலதிபர் ஒருவர் மரணப்படுக்கை வரை சென்றுள்ளார்.டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சவுரப் சர்மா. இவர் கடந்த 12-ம் தேதி ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு மிகவும் குறைந்த நிலையில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததால் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பினார்.
பின்னர் சவுரப் சர்மாவிடம் உடல் நலம் பாதிப்பதற்கு முன் என்ன நடந்தது என மருத்துவர்கள் கேட்ட போது, டெல்லியில் இருந்து புதிய காரில் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்ததாகவும், தொடர்ந்து 8 மணி நேரம் காரில் எங்கேயும் நிறுத்தாமல் சென்றாமல் காலில் ஏதோ மாற்றம் ஏற்படுவதை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த இறுக்கமான ஜீன்ஸ் பேண்டால் கால் முட்டியின் கீழ் பகுதி மெதுவாக சுருங்குவதை உணர்ந்துள்ளார். அதன்பின் அதைப்பற்றி எதையும் சிந்திக்காமல் வலி எடுத்த இடத்தில் மருந்துகளை தடவிவிட்டு அலுவலகத்துக்கு புறப்பட்டுவிட்டேன். ஆனால், அங்கு சென்ற சில நிமிடங்களில், சுய நினைவை இழந்து விழுந்ததாக கூறியுள்ளார்.
மிக இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்ததால் அவர் உடலில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு அதன் விளைவாக இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் எப்போதும் நாம் உடையணியும் போது இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
Discussion about this post