சென்னை அடுத்த கொரட்டூர் ஏரியில் இறந்து கிடந்த ஆயிரக்கணக்கான மீன்கள் அகற்றப்பட்டது.
கொரட்டூர் ஏரியில் மீன்கள் இறந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதாக நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாலை 5 மணிக்கு வந்த ஊழியர்கள் மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதிக வெப்பம் காரணமாக தண்ணீரில் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டு மீன்கள் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் துர்நாற்றம் அதிகம் வீசுவதால் கரை முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்தும் தெளிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் மீன்கள் அருகிலேயே பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டன.
Discussion about this post