கிரிக்கெட் ஆஸ்திரேலியாவால் வழங்கப்படும் சிறந்த வீரருக்கான ஆலன் பார்டர் பதக்கத்தை, ஸ்டீவ் ஸ்மித்தைக் காட்டிலும் ஒரேயொரு வாக்கு அதிகமாகப் பெற்று, டேவிட் வார்னர் 3வது முறையாக வென்றார்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஆண்டுதோறும் சிறந்த வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 2019-ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலை அறிவித்தது. இதில் ஆலன் பார்டர் விருதை பெறுவதில், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இடையே கடும் போட்டி நிலவியது. டேவிட் வார்னர் 194 வாக்குகள் பெற, ஸ்டீவ் ஸ்மித் 193 வாக்குகளைப் பெற்றார். இதையடுத்து, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில், டேவிட் வார்னர் விருதை தட்டிச் சென்றார். கடந்த ஆண்டின் வெற்றியாளர் பாட் கமின்ஸ் 185 வாக்குகள் பெற்றார்.
Discussion about this post