திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் பாலாற்றில் நடைபெறும் தடுப்பணை பணிகளை பார்வையிட்ட மாவட்ட அதிமுக செயலாளர் ஆறுமுகம், பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தியாகும் பாலாறு தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் எனும் இடத்தில் கடலில் கலக்கிறது. வீணாக கடலில் கலக்கும் தண்ணிரை சேமித்து வைக்க, தடுப்பணை வேண்டுமென 100க்கும் மேற்ப்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி, முதற்கட்டமாக வள்ளிபுரம் பாலாற்றின் குறுக்கே 30 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் 750 மீட்டர் நீளத்தில் தடுப்பனை கட்ட, கடந்த ஜனவரி மாதம் பூமி பூஜை நடைப்பெற்று, பணிகள் நடைப்பெற்று வந்தன.
இந்நிலையில் தடுப்பனைக்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், மாவட்ட அதிமுக செயலாளர் ஆறுமுகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
Discussion about this post