தமிழ்நாட்டில் புதிதாக 33 ஆயிரத்து 361 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், கோவையில் மட்டும் 4 ஆயிரத்து 734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 33 ஆயிரத்து 361 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 லட்சத்து 13 ஆயிரத்து 48 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 18 ஆயிரத்து 618 பேர் ஆண்கள் என்றும், 14 ஆயிரத்து 743 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.
சென்னையில் மேலும் 2 ஆயிரத்து 779 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 582ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோவையில் 4 ஆயிரத்து 734 பேரும், திருப்பூரில் 2 ஆயிரத்து 74 பேரும், ஈரோட்டில் ஆயிரத்து 699 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் ஆயிரத்து 395 பேரும், செங்கல்பட்டுவில் ஆயிரத்து 392 பேரும் தொற்றுக்கு ஆளோகியுள்ளனர்.
30 ஆயிரத்து 63 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரே நாளில் 474 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
Discussion about this post