தமிழ்நாட்டில், தினசரி கொரோனா பாதிப்பு, முதன்முறையாக 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளி மாநிலத்தவர் 19 பேர் உள்பட 30 ஆயிரத்து 355 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சத்து 72ஆயிரத்து 735 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 17 ஆயிரத்து 442 பேர் ஆண்கள் என்றும், 12 ஆயிரத்து 913 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.
சென்னையில் மேலும் 7 ஆயிரத்து 564 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 791 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 670 பேரும்,கோவையில் 2 ஆயிரத்து 636 பேரும், திருவள்ளூரில் ஆயிரத்து 344 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் ஆயிரத்து 172 பேரும், கன்னியாகுமரியில் ஆயிரத்து 76 பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
19 ஆயிரத்து 508 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரே நாளில் 293 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
Discussion about this post