இந்தியாவில் 12 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் குறைந்தது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 ஆக இருந்தது.
அடுத்த நாளான ஏப்ரல் 29 ஆம் தேதி திடீரென 3 லட்சத்து 79 ஆயிரமாக உயர்ந்தது. கடந்த 5 தினங்களாக தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில், 12 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 67 ஆயிரத்திற்கும் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியே 26 லட்சத்து 62 ஆயிரத்து 575 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 3 ஆயிரத்து 754 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 116 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 37 லட்சத்து 45 ஆயிரத்து 237 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், ஒரு கோடியே 86 லட்சத்து 71 ஆயிரத்து 222 பேர் குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை 17 கோடியே ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 603 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்
Discussion about this post