டெல்லி, மகாராஷ்டிரா உள்பட 18 மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டதை அடுத்து, கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதே சமயம், கொரோனா உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 11 ஆயிரத்து 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒட்டுமொத்த பாதிப்பு 2 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு புதிதாக 4 ஆயிரத்து 77 பேர் உயிரிழந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 70 ஆயிரத்து 284ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 437 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 36 லட்சத்து 18 ஆயிரம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 18 கோடியே 22 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post