சென்னை திருவொற்றியூர் பகுதியில் பல்லி விழுந்த குளிர்பானத்தை குடித்த தந்தை, மகன் மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர் ஒண்டி குப்பத்தைச் சேர்ந்தவர் ரகுமான்கான். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவருக்கு, ஆசிப்கான் என்ற மகன் உள்ளான். இந்தநிலையில், இருவரும் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் குளிர்பானத்தை வாங்கி குடித்ததாக தெரிகிறது. இதனைதொடர்ந்து குளிர்பானத்தை குடித்த இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த குளிர்பானத்தை உறவினர்கள் திறந்து பார்த்தபோது, இறந்த நிலையில், பல்லி ஒன்று கிடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மயக்கமடைந்த இருவரையும் உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post