தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிரில் ராமபோசா பதவியேற்றார். சர்வதேச தலைவர்கள் உட்பட ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.
தென்னாப்பிரிக்க நாட்டில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிபர் ஜேக்கப் ஜூமா கடந்த ஆண்டு பதவி விலகியதை தொடர்ந்து, சிரில் ராமபோசா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள மைதானத்தில் அதிபராக சிரில் ராமபோசா பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் 40 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய ராமபோசா, ஊழலை ஒழிக்கவும் பொருளாதாரத்திற்கு புத்துயிர் கொடுக்கவும் பாடுபடப்போவதாக குறிப்பிட்டார்.
Discussion about this post