வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நாகை மற்றும் காரைக்கால் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில், ஒடிசா மாநிலம் பாலசூருக்கு நேர் கிழக்கே 160 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த புயல் சின்னம் அடுத்த 48 மணி நேரத்தில், மேலும் வலுவடைந்து ஒடிசா-மேற்கு வங்க கரையை கடக்கும் என்பதால், சென்னை, காட்டுபள்ளி, எண்ணூர், கடலூர், காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் சின்னம் காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் யாரும் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post